கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்


கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் முதல் அமர்வில் காலஞ்சென்ற கல்லூரியின் முன்னாள் அதிபரும், மூத்த கல்விமானுமான மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீலின் நினைவுப் பேருரையும், மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது. இதன் இரண்டாவது அமர்வில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெறும்.
இந்நிகழ்வுக்கு கல்லூரியின் பழைய மாணவரும், பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளைஅழைப்புவிடுக்கப்படுகின்றது.
உங்களது வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளவும், மேலதிக ஏற்பாடுகளுக்கும் உங்களது பெயரை 0772987367 என்ற இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள். இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் தௌபீக் எம். கானை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது secretary.col@kalmunaizahiraoba.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.