ஜனாதிபதி மைத்திரிக்கு நன்றி தெரிவித்தார் ஹுனைஸ் பாறூக்


– றிப்கான் கே.சமான் –

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஜனாதிபதி விசேட ஆனைக்குழுவே சரியானதீர்வாகும் என அன்மையில் நான் தெரிவித்த கருத்திற்கு மதிப்பளித்து விசேட ஜனாதிபதிஆணைக்குழுவை நிருவுவதாக ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன எடுத்த முடிவுக்கு வடபுலமுஸ்லிம்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முன்னால்பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலேயே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டுநிறைவுநாள் நிகழ்வு ஒன்று அண்மையில் கொழும்பில் இடம் பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள்மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், நகர திட்டமிடல் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர்றவூப் ஹகீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உற்பட இன்னும் பல பாராளுமன்ற,முன்னால் பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் அந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி கருத்தை நான் தெரிவித்திருந்தேன் என்றார்.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி விசேட ஆனைக்குழுவேசரியான தீர்வாகும். எனவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவைநிறுவி குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றத்தில் எதிர் நோக்கும் பல்வேறுசவால்கள் உட்பல சகல தகவல்களையும் திரட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகஅபிவிருத்தி அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைவரிடமும் உள்ள சகலதகவல்களைப் பெற்று தீர்க்கமான முடிவை எடுப்பதன் ஊடாகவே வடக்கு முஸ்லிம்களின்மீள்குடியேற்றம் பூரணமடையும் அல்லது அடுத்தடுத்த வருடங்களிலும் இவ்வாறு 26வது, 27வதுஎன நினைவு தினங்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும் எனஅக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் எனது உயிரை அடமானம் வைத்தவனாக எமதுசமூகத்திற்காக வெளியேறிய முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அதுநானாகத்தான் இருக்கும்.

கடந்த 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமுஸ்லிம்கள் இன்றும் புத்தளம், குருநாகல் போன்ற வெளி மாவட்டங்களில் அகதி வாழ்க்கையைவாழ்ந்து வருகின்றார்கள், எனவே இவர்களை முழுமையாக சொந்த மண்ணில் மீள்குடியேற்றவேண்டும், இடம்பெயர்விற்கு முன்னர் பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகள்பல இன்று படையினரால் கைப்பற்றப் பட்டு அக்காணிகளில் படையினர் தற்போது முகாம்அமைத்துள்ளனர். குறிப்பாக எனது சொந்த ஊரான சிலாவத்துறை, மறிச்சுக்கட்டி மற்றும்முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களில் மக்களின் பூர்வீகக் காணிகளில் கடற்படையினர் முகாம்அமைத்துள்ளார்கள் எனவே இக் கடற்படையினரின் முகாம்களை அப்புறப்படுத்திஅக்காணிகளை உரியவர்களுக்கு வழங்கவேண்டும் என்பது மஹிந்த அரசாங்கத்திலிருந்துவெளியேறி தேசிய அரசாங்கத்தில் இணையும் போது தேசிய அரசாங்கத்திடம் நான் முன்வைத்தமுதல் கோரிக்கையாகும்.

எனவே வடக்கு முஸ்லிம்களின் மிள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளைமேற்கொள்ளும் போது படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் கூடியகவனம் எடுக்குமாறும் வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

அத்துடன் 1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது ஒரு குடும்பமாக வெளியேற்றப்பட்ட குடும்பம்இன்று அவர்களின் பிள்ளைகளின் குடும்பம், பேரப் பிள்ளைகளின் குடும்பம் என குடும்பஎண்னிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவ்வாறு அதிகரித்திருக்கும் குடும்பங்களுக்கு அங்குகாணிகள் இல்லை, எனவே இவர்களுக்காக அரச காணிகளை விடுவித்துக் கொடுக்க வேண்டும்என்றும்,

தற்போது மீள்குடியேறியிருக்கும் சில குடும்பங்கள் வீடு, குடிநீர், மின்சாரம், கல்வி, பாதைபோன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றார்கள். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி விசேடஆணைக்குழு இவர்களுக்கான அடிப்படை வசதிகள், தேவைப்பாடுகளில் முக்கிய கவனம் எடுத்தல் வேண்டும் என்றும் பயணாளிகளின் கருத்துக்களுக்கும் தேவைகளுக்குமே முக்கிய கவனம் செழுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.