தேசிய மீலாத்தின போட்டியில் நுஸ்கா ஹானி மூன்றாம் இடம்


– எம்.வை.அமீர் –

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லீம் மகளிர் கல்லூரியில் தரம்-  09ல் கல்வி கற்கும் என். நுஸ்கா ஹானி என்பவர் இவ்வருடம் கொழும்பு-பாத்திமா மகளிர் கல்லலூரியில் நடைபெற்ற தேசிய மீலாத்தின பேச்சுப்போட்டியில் ”இஸ்லாம் கூறும் சகவாழ்வு” எனும் தொனிப்பொருளில் போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளார்.

இவர் ஏ.சீ.. நளீர் PM, சியானா தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். இம்மாணவி தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு கைறியா முஸ்லீம் மகளிர் கல்லூரியில் கற்று பின் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லீம் மகளிர் கல்லூரியில் கற்றுவருகின்றார்.  கடந்த  2013ல் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த்தின பேச்சுப் போட்டியிலும் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமையும், புனித அல்-குர்ஆனில்  22 ஜுஸ்ஊகளை மனனமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்மாணவியின் தங்கை, தம்பி ஆகிய இருவரும் இவ்வருட மாகாண மட்ட மீலாத்போட்டியில் பேச்சு மற்றும் குர்ஆன் மனனம் ஆகிய போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.