பாரிஸ் தாக்குதலின் பின்னணியில் பிரன்ச் இருக்கலாம் என சந்தேகம்- உலமா கட்சியின் தலைவர்


– ஜுனைட்.எம்.பஹ்த் –

பாரிஸ் தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இத்தகைய தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான நியாயத்தை தேடும் அமெரிக்க ஐரோப்பிய சதியாகவும் இருக்க சாத்தியமுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசாங்கம் உருவான போது அதனை ஒழித்துக்கட்டும் நோக்கில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்கர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது என்பது பின்னாட்களில் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தியானது. ஆனாலும் முதலில் இதனை தாம்தான் செய்ததாக அல்கைதா ஏற்றுக்கொண்டதாகவே அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்கள் கூறின. பின்னர் தமது தாக்குதல்களுக்கு நியாயம் தேடவும் அதற்கு ஆதரவாக சர்வதேச நாடுகளை திரட்டவுமே இச்சதிதத்திட்டம் நடத்தப்பட்டது என்பது தெரிய வந்தது.

அதே போல் பாரிஸ் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரன்சுப்படையினர் சிரியாவில் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், பிரான்சிலுள்ள சிரிய அகதிகள் முகாம் தீவைப்பு, கனடாவில் உள்ள அல் சலாமா பள்ளிவாயல் எரிப்பு என்பன பாரிஸ் தாக்குதலின் பின்னணியில் பிரன்ச் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் இருக்கலாமோ என்ற வலுவான சந்தேகத்தை கொடுக்கிறது.

சிரிய யுத்தம் உக்ரமடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அகதிகள் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வதால் இவர்களை வர விடாமல் இருப்பதற்காக தமது தரப்பு நியாயத்துக்காக இவை மேற்கொள்ளப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஐ எஸ் போராளிகளின் பல செயற்பாடுகளில் நாம் உடன்பாடு காணவில்லை. ஆனால் இஸ்லாமிய உலகில் உள்ள ஆயுத தாரிகள் இன்று வரை முஸ்லிம் நாடுகளில்தான் குண்டு வைக்கின்றார்களே தவிர முஸ்லிமல்லாத நாடுகளில் வைக்கவில்லை என்பதே உண்மையாகும். அப்படித்தான் பாரிசில் அப்பாவி மக்களை தாக்குவதாயின் தற்கொலை படையினரை பயன்படுத்தாது குண்டுகளை வைத்து வெடிக்கச்செய்வது மிக இலகுவானது.

இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது கடினமானது என்பதால் அதற்கே தற்கொலை தாக்குதல் நடத்தப்படும். ஆனால் இங்கு சில அறபுக்கள் விலைக்கு வாங்கப்பட்டு ஐ எஸ் மீது பழி போட வேண்டும் என்பதற்காகவே இது திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் பாரிஸ் தாக்குதலை யார் மேற்கொண்டிருந்தாலும் அது கண்டிப்புக்குரியதாகும். அதே போல் சிரியா, இராக்கில் அப்பாவி மக்கள் மீது குண்டு பொழியப்படுவதையும் மனிதாபிமானமுள்ள சக்திகள் கண்டித்து அவற்றை நிறுத்தவும் குரல் கொடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.