அமீருடன் விளையாட மறுத்த ஹபீஸ்?


ஒராண்டு இடைவேளைக்கு பிறகு பங்களாதேஷ் பிரிமீயர் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

ஸ்பாட்பிக்சிங் சூதாட்ட வழக்கில் இருந்து திரும்பிய பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீர் இந்தப் போட்டியில் சிட்டகாங் விங்ஸ் அணியில் விளையாடுகிறார். இந்த அணியில் விளையாட அந்த அணி நிர்வாகம் பாகிஸ்தான் 20 ஓவர்கள் அணித் தலைவர் முகமது ஹபீசை தொடர்பு கொண்டது.

எனினும் முகமது அமீர் அந்த அணியில் இருப்பதால் ஹபீஸ் விளையாட மறுத்துவிட்டதாக தகவல்கள் வௌியானது.

எது எவ்வாறு இருப்பினும் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என்றும், முகமது அமீருடன் இணைந்து ஆடுவதில் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் 2010–ம் ஆண்டு நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் அமீர், சல்மான்பட், ஆசிப் ஆகிய பாகிஸ்தான் வீரர்கள் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றனர். இந்த தடை முடிந்ததால் அவர்கள் சர்வதேச போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

Advertisements