இலங்கையின் 6 ஆவது கடல் சார் மாநாடு இன்று ஆரம்பம்


இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள 6 ஆவது சர்வதேச கடல் சார் மாநாடு இன்று முதல் நாளை  செவ்வாய் கிழமை வரை காலியில் நடைபெறவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 4 கடற்படை தளபதிகள் பங்கேற்கவுள்ளனர்.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 37 நாடுகள் 10 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.