மட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் அமைப்பினால் 425 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் செயற்படுத்தப்படுவதாக யுனொப்ஸ் நிறுவன திட்ட அதிகாரி சி.சிவகுமாரன் தெரிவித்தார் 

மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபை பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் முக்கிய உள்ளூர் பொழுதுபோக்கு ஓய்விடமான காத்தான்குடி கடற்கரை பிரதேசம் இன்று முழுநாளும் யுனொப்ஸ் உத்தியோகத்தர்களினால் தூய்மைப்படுத்தப்பட்டது.

காத்தான்குடி நகர சபை இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

உக்காத கழிவுகளை பொறியியல் ரீதியாக அமைக்கப்டும் நிலம் நிரப்பு தளத்திற்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் இத்திட்டத்தினூடாக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

UNOPS

Advertisements