‘ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கம்’


இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்கா மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கம்'

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சொத்துக்கள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்களை முழுமையாக சமர்ப்பிக்க தவறியதாக முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா மீது குற்றஞ்சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மனு ஒன்றை சமர்ப்பித்த ஷிராணி பண்டாரநாயக்காவின் சட்டத்தரணிகள், இந்த குற்றச்சாட்டுக்கள் பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டதாக அதில் கூறியிருந்தார். அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்குமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று அவர் குறித்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்க விரும்பவில்லை என்று ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்ததால், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisements