14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்


வவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை 16ம் திகதி 14 வயது சிறுமி ஒருவர் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் இது தொடர்பாக விளக்கமளித்ததன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Advertisements