Category Archives: Politics

“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்”  NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் 

– NFGG ஊடகப் பரிவு –

‘கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வுகள் அரசியல் வாதிகளுக்கு புதிய புதியபதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றதே தவிர, அவை மக்களின்அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதாக அமையவில்லை.  எனவேதான் , தற்போது உத்தேசிக்கப்படும்அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாகஅல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமையவேண்டும் என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கானகூட்டம் அண்மையில் மூதூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேNFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கடந்த மூன்று தசாப்தங்களுக்கம் மேலாக தொடரும் இன முறுகலும் அதனோடு தொடர்புபட்டதேசியப் பிரச்சினையும் நமது நாட்டை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. மாத்திரமின்றி நாட்டுமக்களை இலங்கையர் என்ற பொது அடையாளத்திருந்தும் தூரமாக்கி இன, மொழி, மதஅடிப்படைகளில் பிரித்தும் வைத்திருக்கிறது.

பயங்கரவாதம், தோற்கடிக்கப்பட்டு இனவாதம் அடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும்அரசியல் சூழ்நிலையானது நாட்டின் தேசிய பிரச்சினைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வினைகொண்டு வருவதற்கு ஏற்ற மிகப் பொருத்தமான சூழ்நிலையாகும். இந்த இறுதி சந்தர்ப்பத்தினைதவறவிட்டுவிடக் கூடாது என்பதனை சகல தரப்பினரும் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்ற பல்வேறு விவாதங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. கடந்த 35 வருடங்களில் பலவகையான அரசியல் தீர்வுகள் கொண்டு வரப்பட்டன.மாவட்ட அபிவிருத்தி சபை, மாகாண சபை, மற்றும் வடகிழக்கிற்கான இடைக்கால நிர்வாகம் எனப்பல்வேறு வடிவங்களிலான தீர்வுகள் கொண்டு வரப்பட்டன. மிக முக்கியமாக தற்போதுநடைமுறையிலிருக்கும் மாகாண சபைக் கட்டமைப்புகளைச் சொல்லலாம்.

13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பல்வேறுஅதிகாரங்கள் இருக்கின்றன. அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் நிர்வாகம்நடாத்தப்படுகின்றது. வடக்கில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கும்நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார்.கடந்த 8 வருடங்களாக கிழக்குமாகாண சபை இயங்கி வரும் அதேவேளை கடந்த இரண்டரை வருடங்களாக வடக்கு மாகாணசபைஇயங்கி வருகிறது. அங்கு பல புதிய புதிய அரசியல் வாதிகள் தோன்றியிருக்கிறார்கள். பலவகையானபதவிகளையும், அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், இந்த இரண்டு சபைகளுக்கும் ஊடாக மக்களின் பிரச்சினைகள் எந்தளவு தூரம்தீர்க்கப்பட்டுள்ளன..?

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம், காணி விவகாரங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதாரஅபிவிருத்தி என்று பல விடயங்களை அம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக பட்டியலிடலாம்.

இதில் காணி மற்றும் புனர்வாழ்வு போன்ற அதிமுக்கிய பிரச்சினைகளுக்காவதுதிருப்பதிப்படும்படியான தீர்வுகள் எதுவும் கிடைத்திருக்கிறதா..? ‘இல்லை’ என்பதனை எல்லோரும்ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படியென்றால் அரசியல் வாதிகளின் பதவிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்த மாகாணசபைகள் ஏன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுக்கவில்லை..?

அரசியல் தீர்வினைப் பேரம் பேசுகின்ற அரசியல் வாதிகளும், கட்சிகளும் தமது எதிர் கால அரசியல்நலன்களை முதன்மைப்படுத்தியே தீர்மானங்களை மேற் கொள்கின்றனர். மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளும் நியாயமான எதிர் பார்ப்புகளும் இறுதிக் கட்டங்களில் புறந்தள்ளப்படுகின்றன.

எனவேதான், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதி சந்தர்ப்பத்திலாவது கொண்டு வரப்படும் அரசியல்தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும்.இது தொடர்பில் நாமெல்லோரும் முன்னெச்சரிக்கையுடன் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.”

இந்நிகழ்வில் NFGG யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும், தலைமைத்துவ சபைஉறுப்பினர்களான Dr. KM சாகீர், சகோ. சிராஜ் மஸூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சபையின் செயலாளர MACM ஜவாஹிர்அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி றிபாஸ், மற்றும் உவைஸ் பாவா உட்படதிருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பலரும்கலந்து கொண்டனர்.

Advertisements

இலங்கை ஜனாதிபதியும் ஆஸ்த்திரியா ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஸ்த்திரியா நாட்டு ஜனாதிபதி ஹெய்ன் பிஷர் அவர்களை சற்றுமுன்னர் சந்தித்தார்.

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஸ்த்திரியா நோக்கி சென்றார். Read more

‘ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கம்’

இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதியான ஷிராணி பண்டாரநாயக்கா மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

2016 வரவு செலவுத் திட்டம் ஓர் பார்வை: கல்வித்துறைக்கும் முதலீட்டாளர்களுக்கும் கூடுதல் சலுகைகள்

நாட்டின் 69 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த வெள்ளியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நீண்டகால பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்ளும் நோக்கில் இணக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.  Read more

பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதத்தை நினைவுகூர்ந்தார் ஜனாதிபதி

மாலம்பே முன்மாதிரிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நினைவு கூர்ந்தார். Read more

சமந்தா – விக்னேஸ்வரன் சந்திப்பில் பேசியது என்ன?

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
Read more

« Older Entries